கோவிலில் சிறப்பு வழிபாடு


கோவிலில் சிறப்பு வழிபாடு
x

கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் வியாழக்கிழமையை முன்னிட்டு தட்சிணாமூர்த்தி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், திருநீறு உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.


Next Story