வாய்மேடு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


வாய்மேடு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

வாய்மேடு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

நாகப்பட்டினம்

தலைஞாறை அடுத்த ஓரடியம்புலம் ராமபக்த விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சாமிக்கு பால், பன்னீர், இளநீர், நெய், சந்தனம், தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல தலைஞாயிறை அடுத்த உம்பளச் சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் பக்த வைராக்கிய ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story