வனதுர்க்கை அம்மன கோவிலில் சிறப்பு வழிபாடு


வனதுர்க்கை அம்மன கோவிலில் சிறப்பு வழிபாடு
x

தோப்புத்துறை வனதுர்க்கை அம்மன கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் தோப்புத்துறை பகுதியில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். வேதாரண்யம் மேல வீதியில் உள்ள மாணிக்கவாசகர் மடத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசக சாமிக்கு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் மாணிக்கவாசகர் மடம் தர்மகத்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட பலர் கலந்து கொண்டனர். வேம்பதேவன்காடு தெற்கு பகுதியில் உள்ள மவுன சித்தர் பீடத்தில் பக்தர்கள் வந்து தியானம் செய்து வழிபாடு நடத்தினர்.


Next Story