வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 22 Aug 2023 1:00 AM IST (Updated: 22 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

வளர்பிறை நாக பஞ்சமியையொட்டி வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வளர்பிறை நாக பஞ்சமி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வராகி அம்மன் கோவில்களிலும் வளர்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்பகவுண்டர் பள்ளி வளாகத்தில் அஷ்ட வராகி அம்மன் கோவிலில் வளர்பிறை நாக பஞ்சமி சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர் உபகார பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. தொடர்ந்து அஷ்ட வராகி அம்மனுக்கு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடந்தது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.

மகாகாளி வராகி அம்மன்

இதேபோன்று தர்மபுரி அன்னசாகரம் சாலை சித்திலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வராகி அம்மன் கோவிலில் வளர்பிறை நாக பஞ்சமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அன்பளித்தார். இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

தர்மபுரி அருகே மொடக்கேரி கிராமத்தில் அமைந்துள்ள16 அடி உயரமுள்ள மகாகாளி வராகி அம்மன் கோவிலில் வளர்பிறை நாக பஞ்சமியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் நேர்த்தி கடனை நிறைவேற்ற எலுமிச்சை, தேங்காய் மற்றும் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story