வளர்பிறை பஞ்சமியையொட்டி வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


வளர்பிறை பஞ்சமியையொட்டி வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 10:35 AM IST)
t-max-icont-min-icon

வளர்பிறை பஞ்சமியையொட்டி வராகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி

வளர்பிறை பஞ்சமி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வராகி அம்மன் கோவில்களிலும் வளர்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள ஸ்ரீ அஷ்ட வராகி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமி சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் உபகார பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடந்தது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.

மகாகாளி வராஹி அம்மன்

இதேபோன்று தர்மபுரி அன்னசாகரம் சாலை சித்திலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ வராகி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அம்மன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அன்பளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

தர்மபுரி அருகே மொடக்கேரி கிராமத்தில் அமைந்துள்ள 16 அடி உயரமுள்ள மகாகாளி வராகி அம்மன் கோவிலில் வளர்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற எலுமிச்சை, தேங்காய் மற்றும் பூசணியில் விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story