ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

அனுமன் ஜெயந்தியையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

ஆனந்தமங்கலம்

பொறையாறு அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் ராஜகோபாலசாமி ்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு பால், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் வடை, துளசி, வெற்றிலை, எலுமிச்சை பழமாலை ஆகியவை சாற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை புதுத்தெருவில் அபய ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக மூலவருக்கும், உற்சவருக்கும் பால் தயிர் சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அபய ஆஞ்சநேயர் வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதே போல மயிரநாதர் மேல வீதியில் உள்ள சவுபாக்கிய ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story