விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 10 Jan 2023 6:47 PM GMT)

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள அச்சம் தீர்த்த விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு விநாயகருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள கற்பகவிநாயகர், கட்சுவான் முனீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

வீரகத்தி விநாயகர்

நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்ப விநாயகர், ஆறுக்காட்டுத்துறை விநாயகர் கோவில், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் ஆகிய விநாயகர் கோவில்களில் சிறப்பு வழபாடு நடந்தது.


Next Story