விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 10 March 2023 6:45 PM GMT (Updated: 10 March 2023 6:46 PM GMT)

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

நாகை காயாரோகண சாமி கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சாமிக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன், பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் ஏழைபிள்ளையார் கோவில், நடுக்கம் தீர்த்த விநாயகர் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள செங்கழுநீர் விநாயகர், விட்டவாசல் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

செல்வ விநாயகர் கோவில்

வல்லப கணபதி, மாவடி பிள்ளையார், நீலா மேலவீதியில் உள்ள சாபம் தீர்த்த விநாயகர், நாகூர் விருச்சிக விநாயகர், காடம்பாடி சாலமன் தோட்டத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

மறைமலைநகரில் உள்ள நவசக்தி விநாயகர், சொக்கநாதர் கோவில் தெருவில் உள்ள வீர சொக்கநாத விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேதாரண்யம்

வேதாரண்யம் அச்சம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேதாரண்யம் கற்பகவிநாயகர், கட்சுவான் முனீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர், களஞ்சியம் பிள்ளையார், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர் ஆகிய விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

சித்தி அரசு விநாயகர் கோவில்

குரவப்புலம் சித்தி அரசு விநாயகர், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், நாகை சாலை மருதமரத்து விநாயகர், ஞானவிநாயகர், புஷ்பவனம் புஷ்ப விநாயகர், ஆறுக்காட்டுத்துறை விநாயகர் கோவில், வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story