விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 8 May 2023 6:45 PM GMT (Updated: 8 May 2023 6:45 PM GMT)

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

வேதாரண்யம் அச்சம் தீர்த்த விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக விநாயகருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் வேதாரண்யம் கற்பகவிநாயகர் கோவில், கட்சுவான் முனிஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர், இலக்கு அறிவித்த விநாயகர் கோவில், களஞ்சியம் பிள்ளையார் கோவில், சேது சாலையில் உள்ள சித்திவிநாயகர் கோவில், மண்டபகுளம் கரையில் உள்ள சங்கடம் தீர்த்த விநாயகர் கோவில், குரவப்புலம் சித்தி அரசு விநாயகர் கோவில், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

ஞான விநாயகர் கோவில்

நாகை சாலை மருதமரத்து விநாயகர் கோவில், ஞானவிநாயகர் கோவில், புஷ்பவனம் புஷ்ப விநாயகர் கோவில், தேத்தாக்குடி தெற்கு யாதவபுரம் மணர்குள சித்தி விநாயகர் கோவில், ஆறுக்காட்டுத்துறை விநாயகர் கோவில், வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள வீரகத்தி விநாயகர், நடுக்கம் தீர்த்த விநாயகர் ஆகிய விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Next Story