சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்,
சங்கராபுரம் கடைவீதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது. முன்னதாக விநாயகருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சக்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போன்று சங்கராபுரம் திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள வன்னி விநாயகர், செல்வவிநாயகர், வாசவி கோவில் வளாகத்தில் உள்ள மஹோற்கடகணபதி, பொய்க்குணம் சாலையில் உள்ள நவசக்தி விநாயகர் மற்றும் சங்கராபுரம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story