அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 24 July 2023 12:15 AM IST (Updated: 24 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே அ.பாண்டலத்தில் உள்ள அமிர்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சங்கராபுரம் மங்களநாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர் கோவில் உள்பட சங்கராபுரம் பகுதியில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடிப்பூர விழா நடைபெற்றது.

1 லட்சம் வளையல்களால் அலங்காரம்

உளுந்தூர்பேட்டை அமைச்சார் அம்மன் வீதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிப்பூரத்தை யொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் 1 லட்சம் வளையல்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story