அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 11 Aug 2023 6:47 PM GMT)

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நாகப்பட்டினம்

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

வாய்மேடு

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே வண்டுவாஞ்சேரியில் உள்ள வண்டுறை மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீறு, தேன், திரவியப்பொடி உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் தலைஞாயிறு அருகே உள்ள உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

திருமருகல்

திருமருகல் மாரியம்மன் கோவில், வெள்ளத்திடல் மகா காளியம்மன், முத்து மாரியம்மன், வாழ்மங்கலம் மழை மாரியம்மன், ஆதீனங்குடி மாரியம்மன் கோவில், அனந்தநல்லூர் மாரியம்மன் கோவில், புத்தகரம் மகா காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆடி கடைசி வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி கோவில்களில் நடைபெற்ற சுமங்கலி பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

வேதாரண்யம்

வேதாரண்யம் அருகே கள்ளிமேடு கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story