அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன

மயிலாடுதுறை
ஆடிமாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகளவில் கோவில்களில் திரண்டு அம்மனை பயபக்தியுடன் வழிபடுவர்.அந்தவகையில் நேற்று ஆடி முதல் வெள்ளியையொட்டி சீர்காழி கீழத்தெருவில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் கொண்டு வந்த வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

புற்றடி மாரியம்மன்

இதேபோல தென்பாதி சாலை காரையால் மாரியம்மன், சட்டநாதபுரம் முத்துமாரியம்மன், சீர்காழி புற்றடி மாரியம்மன், தென்பாதியிலுள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், திட்டை மாரியம்மன் கோவில், திருப்புங்கூர் மாரியம்மன் கோவில், வைத்தீஸ்வரன் கோவில் கீழத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் ஆடி வெள்ளியையொட்டி நேற்று அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், கலந்து கொண்ட பக்தர்களுக்கு கஞ்சி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவெண்காடு

இதேபோல, திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள கவுபாக்கிய துர்க்கை அம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளியையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். அதனைத்தொடர்ந்து துர்க்கைக்கு மங்களப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.Next Story