அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நார்த்தாமலை முத்துமாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் ஆடி மாதத்தில் விரதம் இருந்த பெண்கள் நேற்றுடன் விரதத்தை முடித்தனர்.

மணமேல்குடி தெற்கூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையடுத்து நேற்று பக்தர்கள் பால்குடம், காவடி, செடல் காவடி, அக்னி காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு பொங்கல் வைத்தல், கும்மியடித்தல், ஆயிரம் கண்பார்வை மதுபாலி எடுத்தல் ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அம்மன் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் மணமேல்குடி கிராமமக்கள் செய்திருந்தனர்.


Next Story