அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 20 Jan 2023 6:45 PM GMT (Updated: 20 Jan 2023 6:47 PM GMT)

தை மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு

தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரியில் அமைந்துள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தை மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், தேன், இளநீர், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story