அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சங்கராபுரம் பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்
சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் தை மாதம் 2-வது வெள்ளியினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் பாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன், பெரியநாயகி அம்மன், மகா நாட்டு மாரியம்மன், குளத்தூர் சவுடேஸ்வரியம்மன், சங்கராபுரம் புற்று மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story