முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழிமலை முருகன் கோவிலில் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையொட்டி நாளையொட்டி சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் மலையை சுற்றி வந்து, முருகனை வழிப்பட்டனர்.

இதேபோல காகிதபுரம், பவித்திரம், வெண்ணெய்மலை பகுதியில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story