முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
தைப்பூச திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூச திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
தைப்பூச திருவிழாவையொட்டி, நெல்லையில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
அதன்படி நெல்லையப்பர் கோவில் ஆறுமுகம் சன்னதி, நெல்லை சந்திப்பு சாலைகுமரன் கோவில், வண்ணார்பேட்டை சாலை சுப்பிரமணியன் கோவில், பாளையங்கோட்டை மேலவாசல் முருகன் கோவில், பாளையங்கோட்டை சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் தைப்பூச சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திரளான பக்தர்கள் பங்கேற்பு
அதிகாலையில் கோவில்களில் நடை திறக்கப்பட்டு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனைகள் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேரன்மாதேவியை அடுத்த அத்தாளநல்லூரில் விசாக கட்டளை மடம் இணைந்த பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் திருவீதி உலா நடைபெற்றது. நேற்று இடும்பன் பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.