முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

வேலாயுதம்பாளையத்தில் அருகே காகிதபுரம் குடியிருப்பில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதேபோல் பவித்திரம் பாலமலை, வெண்ணெய்மலை ஆகிய முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story