பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 13 Sept 2023 2:30 AM IST (Updated: 13 Sept 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தேனி

பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பிரதோஷ பூஜை

போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையப்பசுவாமி கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், மலர் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பரமசிவன் மலைக்கோவில், சுப்பிரமணியசுவாமி கோவில், பிச்சாங்கரை கீழச்சொக்கநாதர் கோவில், மேலச்சொக்கநாதர் கோவில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், சத்திரம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் ஆகிய கோவில்களில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

பெரியகுளம் அருகே ஈச்சமலையில் உள்ள மகாலட்சுமி கோவிலில் பிரதோஷத்தையொட்டி அங்குள்ள சிவபெருமான், அதிகார நாகராஜர், நந்திபகவானுக்கு கரும்பு சாறு, பால், தயிர். சந்தனம், மஞ்சள், இளநீர், தேன் உள்ளிட்ட 21 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மல்லிகை, ரோஜா, தாமரை, அரளி உள்ளிட்ட பூக்களை கொண்டு சிவபெருமான், நந்தீசுவரர், நாகராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது.

கைலாசநாதர் மலைக்கோவில்

இதேபோல் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோவிலில் கைலாசநாதர் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மேலும் பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோவில், காளஹஸ்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் உள்ள சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.


Next Story