சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

ஆடி மகா பிரதோஷத்தையொட்டி சிவன்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திண்டுக்கல்

ஆடி மாத மகா பிரதோஷத்தையொட்டி பழனி பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. அதன்படி பழனி பட்டத்து விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சிவபெருமானுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

இதேபோல் பழனி மலைக்கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி, பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, பெரியாவுடையார் கோவில், தட்டான்குளம் சிவன் கோவில் என அனைத்து சிவன் கோவில்களிலும் மகா பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், வழிபாடு நடந்தது.


Next Story