சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

சீர்காழி அருகே திருப்பங்கூர் சிவலோகநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.முன்னதாக நந்தி பகவானுக்கு மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம், விபூதி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. . பின்னர் பிரதோஷ நாயகர் பிரகார புறப்பாடு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் செய்திருந்தார்.இதேபோல வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதசுவாமி கோவிலில் வைத்தியநாதன் மற்றும் தையல்நாயகி அம்மனுக்கு அபிஷேகமும் ஆராதனையும் நடந்தது. திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோவில், அன்னப்பன் பேட்டை கலிகாமேஸ்வரர் கோவில், பூம்புகார் சாயாவனேஸ்வரர் கோவில், பல்லவனம் பல்லவனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


1 More update

Next Story