சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

புன்னம் பகுதியில் புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பில் உள்ள காசி விஸ்நாதர் கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.


Next Story