பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

தவிட்டுப்பாளையம் அருகே நன்செய் புகழூரில் மேகபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள நந்திபகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் வேலாயுதம்பாளையம் அருகேயுள்ள காகிதபுரம் குடியிருப்பில்

காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள நந்திபகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் உள்ள சிவன்கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story