கோவில்களில் சிறப்பு வழிபாடு


கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

மார்கழி மாத பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

மார்கழி மாத பிறப்பையொட்டி திருவெண்காடு அருகே திருநகரி கல்யாண ரங்கநாதர் பெருமாள் கோவிலில் திருமங்கை ஆழ்வாருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையொட்டி கல்யாணரங்கநாதர் பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வாருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன் செய்து இருந்தார். செம்பனார்கோவில் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நாங்கூர் செம்பொன் அரங்கர் கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story