கோவில்களில் சிறப்பு வழிபாடு


கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு கோவில்களில் தை மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது.

இடங்கண்ணியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிந்தாமணி மாரியம்மன் கோவில், காரைக்குறிச்சி காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், தா.பழூர் காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், செல்லியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தை 2-ம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.


Next Story