கோவில்கள்-தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு


கோவில்கள்-தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
x

ஆங்கில புத்தாண்டையொட்டி கரூர் மாவட்ட கோவில்கள்-தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. சிறப்பு பிரார்த்தனை

கரூர்

புத்தாண்டையொட்டி கரூா் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள புனித தெரசாம்மாள் ஆலயத்தில் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பின்னர் பிரார்த்தனை முடிந்ததும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதில் செங்குந்தபுரம் காந்திகிராமம், தாந்தோணிமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கரூர் சர்ச்கார்னர் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ.ஹென்றி லிட்டில் நினைவாலயம், பசுபதிபாளையம் கார்மேல் ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. புத்தாண்டையொட்டி கரூரில் உள்ள அனைத்து தேவாலயங்கள் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தேவாலயங்கள்

வேலாயுதம்பாளையம் ஹைஸ்கூல் மேடு ஆலயம்,முல்லை நகா் இந்திய சுவிஷே திருச்சபை உலக ரட்சக ஆலயம், அந்தோணியர் ஆலயம், புகழூர் சி.எஸ்.ஐ. கிறிஸ்துவநாதர் ஆலயம்,தளவாப்பாளையம் சி.எஸ்.ஐ. ஆலயம் உள்ளிட்ட பல்ேவறு ஆலயங்களில் ேநற்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

புத்தாண்டு வழிபாடு

கரூர் அண்ணாநகரில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் புத்தாண்டையொட்டி நேற்று அதிகாலை விநாயகருக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ெதாடா்ந்து கோவிலில் உள்ள பாலமுருகன், துர்க்கை அம்மன், ஆஞ்சநேயர், அய்யப்பன், நவக்கிரகம் உள்ளிட்ட சுவாமிகளுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இதேபோல் கரூர் மாரியம்மன் கோவில், பசுபதீஸ்வரர் கோவில், தாந்தோணிமலை வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று புத்தாண்டையொட்டி கோவில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.

நொய்யல்

புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் பாலமலை, புன்னம், குந்தாணிபாளையம், சேமங்கி, நொய்யல், திருக்காடுத்துறை, தவிட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் அருகே நாணப்பரப்பு மாரியம்மன் கோவிலில் நேற்று காலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

இதேபோல் புகழிமலை, நன்செய்புகழூர், டி.என்.பி.எல்., தளவாப்பாளையம்,

தோட்டக்குறிச்சி, சேங்கல் மலை, மண்மங்கலம், வாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story