ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு


ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தாணுமாலய சாமி கோவிலில் ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு

கன்னியாகுமரி

சுசீந்திரம்,

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இங்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி சிலை உள்ளது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயர் சாமிக்கு ஜெயந்தி விழா கொண்டாடப்படும். மேலும் மாதம் தோறும் மூலம் நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயருக்கு முழு உருவ வெள்ளிஅங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் நேற்று மூலம் நட்சத்திரத்தை யொட்டி சாமிக்கு வெள்ளிஅங்கி சார்த்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்திருந்தது.


Next Story