தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோவிலில்தைஅமாவாசை சிறப்பு வழிபாடு


தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோவிலில்தைஅமாவாசை சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி பிரத்தியங்கிரா தேவி கோவிலில்தைஅமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு ஸ்ரீபிரத்தியங்கிராதேவி, ஸ்ரீமகா காலபைரவர், குருமகாலிங்கேசுவரருக்கு அமாவாசை, பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி நாட்களில் 'சாக்தஸ்ரீ' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மகா யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. இதன்படி, தை மகாளய அமாவாசையை முன்னிட்டு சித்தர் பீடத்தில் முன்னோர்களுக்கான 'பித்ரு பூஜை'யுடன் கூடிய மகா யாக சிறப்பு வழிபாடுகள் ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடந்தது. தொடர்ந்து திருமஞ்சனம், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர், பால், குங்குமம் உள்ளிட்ட 21 வகையான அபிசேகமும், தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாரதனையும் நடந்தது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சித்தர் பீடத்தினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.


Next Story