பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு


பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு
x

பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் வனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத பவுர்ணமியையொட்டி நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் சாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். வேதாரண்யம் நகரில் மேல வீதியில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் மடத்தில் உள்ள மாணிக்கவாசகருக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சிவப்பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்களை பாடி மாணிக்கவாசகரை வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மட தர்மகத்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்திநாத பண்டார சன்னதி உள்பட பலர் கலந்து கொண்டனர். வேம்பதேவன்காடு தெற்கு பகுதியில் அமைந்துள்ள மவுனமகான் சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் கடல் அன்னைக்கு பக்தர்கள் சிறப்பு தீப ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர். வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கீழகோபுரவாசலில் இருந்து பக்தர்கள் தேவார பாடல்களை பாடியப்படி நான்கு முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர். பின்னர் அர்த்தசாம பூஜையில் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.


Next Story