பரமத்திவேலூரில்பாலா திரிபுரசுந்தரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு


பரமத்திவேலூரில்பாலா திரிபுரசுந்தரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு
x
நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூரில் பாலா திரிபுரசுந்தரி அம்மனுக்கு ஆடி மாத கடைசி நாளான நேற்று சிறப்பு வழிபாடு மாணிக்கவாசகர் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவையொட்டி பாலா திரிபுரசுந்தரி அம்மனின் பஞ்சலோக உருவச்சிலைக்கு தங்க காசுகளால் அர்ச்சனையும், குங்கும அர்ச்சனையும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. இதில் வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பாலா திரிபுரசுந்தரி அம்மனின் படம், பூஜை புத்தகங்கள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story