வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு யாகம்


வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு யாகம்
x

வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சி வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாத கிருத்திகையை முன்னிட்டு குழந்தை வரம் வேண்டியும், உலக நன்மைக்காகவும், கடன் பிரச்சினை தீரவும், திருமண தடை நீங்குவதற்காகவும், மழை பெய்ய வேண்டியும், சிறப்பு யாகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு 11 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல விஜயகரிசல்குளத்தில் உள்ள வழிவிடு பாலமுருகன் கோவிலிலும் மாதக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.


Next Story