பொன்னமராவதி அருகே செவலூர் பூமிநாதர் கோவிலில் சிறப்பு யாகம்

பொன்னமராவதி அருகே செவலூர் பூமிநாதர் கோவிலில் வாஸ்து நாளையொட்டி சிறப்பு யாகம் நடைப்பெற்றது.
புதுக்கோட்டை
பொன்னமராவதி அருகே செவலூர் பூமிநாதர்- ஆரணவல்லி அம்பாள் கோவிலில் மாதந்தோறும் வரும் வாஸ்து நாளன்று சிறப்பு யாகம், சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி வாஸ்து நாளையொட்டி நேற்று வாஸ்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின்னர் சுவாமி சந்நிதி முன்மண்டபத்தில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
இதையடுத்து, சாமி தரிசனம் செய்த பக்தர்கள் பூஜை செய்து வைக்கப்பட்ட செங்கற்களை வாங்கி சென்றனர். அந்த செங்கலை வீட்டு பூஜையறையில் வைத்து, தொடர்ந்து பூமிநாதரை எண்ணி வழிபட்டு வந்தால், கூடிய விரைவிலேயே சொந்தமாக வீடு அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story