திருமேனிநாதர் கோவிலில் சிறப்பு யாகம்


திருமேனிநாதர் கோவிலில் சிறப்பு யாகம்
x

திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழி திருமேனிநாதர் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல திருச்சுழி குண்டாற்றில் அமாவாசையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகாலை முதலே பக்தர்கள் வந்தனர். பின்னர் அங்கு நீராடி விட்டு இறந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் திருச்சுழி திருமேனிநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர்.


Next Story