ஓட்டல் உரிமையாளர்குளுக்கு உணவு பாதுகாப்பு குறித்த சிறப்பு பயிற்சி
தர்மபுரியில்உணவு பாதுகாப்பு குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவகங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர்களுக்கான மேம்பட்ட உணவு பாதுகாப்பு குறித்த சிறப்பு பயிற்சி தர்மபுரியில் நடந்தது. உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்ட ஒட்டல் பேக்கரி சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், சங்க செயாளர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்றார்.
இதில் தர்மபுரி, பாலக்கோடு, காரிமங்கலம், தொப்பூர், பாளையம்புதூர், அரூர், நல்லம்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து உணவக உரிமையாளர்கள், மேலாளர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு உணவு பாதுகாப்புதுறை அங்கீகாரம் பெற்ற பரிஷன் அமைப்பின் தலைமை நிர்வாகி பசுபதி மற்றும் பயிற்றுனர் கார்த்திக் ஆகியோர் பயிற்சி அளித்தனர். தொடர்ந்து பயிற்சி சார்ந்த தேர்வு நடந்தது. நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமணன், கந்தசாமி உள்ளிட்ட உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.