கிருஷ்ணகிரியில்தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில்தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிக்டோஜாக்) சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். டிக்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் தியோடர் ராபின்சன், நிர்வாகிகள் சேகர், பவுன்துரை, கணேசன், மாரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் எண்ணும், எழுத்தும் திட்டத்தின் மூலம் 1, 2, 3ம் வகுப்பு மாணவர்களை மதிப்பீடு செய்யும் பொருட்டு பி.எட். பயிற்சி பெறும் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது. கருத்தாளர்களாக ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது. விடுமுறை நாட்களில் பயிற்சியை நடத்தக்கூடாது. எமிஸ் பதிவேற்றத்தில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும். எஸ்.எம்.சி. கூட்டங்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்த முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில், 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story