நாமக்கல்லில், மாவட்ட அளவிலானகல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகலெக்டர் உமா தொடங்கி வைத்தார்


நாமக்கல்லில், மாவட்ட அளவிலானகல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகலெக்டர் உமா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 18 Aug 2023 7:00 PM GMT (Updated: 18 Aug 2023 7:01 PM GMT)
நாமக்கல்

நாமக்கல்லில் மாநில சிறுபான்மை ஆணையம் சார்பில் நடந்த மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியை கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.

பேச்சுப்போட்டி

தமிழ்நாடு அரசின் மாநில சிறுபான்மை ஆணையம் சார்பில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடந்தது. கல்லூரியின் முதல்வர் கோவிந்தராசு வரவேற்றார். ராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் உமா போட்டியை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து ஆங்கிலம் மற்றும் தமிழில் தனித்தனியாக 5 தலைப்புகளில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார். இதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

தனித்திறமை

முன்னதாக கலெக்டர் உமா பேசியதாவது:- மாணவர் பருவத்தில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். சக மாணவர்களின் உணவை சாப்பிடுவதோடு, குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறோம். மாணவர் பருவத்தில் கடைபிடிக்கும் இந்த ஒற்றுமையை சமுதாயத்திற்குள் போன பின்னரும் தொடர வேண்டும். சிலரின் உணர்ச்சிபூர்வமான தூண்டுதலால் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறையானது வருத்தமளிக்கிறது. மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் தனித்திறமையை கண்டறிந்து அதில் உங்களின் முயற்சியை மேற்கொண்டால் வாழ்வில் முன்னேற பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் நெடுஞ்செழியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சித்திக், மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story