மீன்வள பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி


மீன்வள பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி
x
தினத்தந்தி 3 April 2023 7:15 PM GMT (Updated: 3 April 2023 7:15 PM GMT)

மீன்வள பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடக்க உள்ளது.

நாகப்பட்டினம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் தமீம் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தமிழ், ஆங்கிலத்தில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரமும், 2-வது பரிசு ரூ.10 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. அதேபோல் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-வது பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-வது இடம் பிடிப்பவருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர். நாகை மாவட்டத்துக்கான போட்டிகள் மீன்வள பல்கலைகழகத்தில் வருகிற 26-ந்தேதி கலெக்டர் அருண் தம்பு ராஜ் தலைமையில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வருகிற 10-ந் தேதிக்குள் vijayaragavannagai2022@gmail.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story