மாணவ-மாணவிகளிடையே பேச்சு போட்டி

`செஸ் ஒலிம்பியாட்' குறித்து மாணவ-மாணவிகளிடையே பேச்சு போட்டி நடந்தது
மயிலாடுதுறை
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளிடையே செஸ் ஒலிம்பியாட் குறித்து பேச்சு போட்டி நடைபெற்றது. மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று செஸ் விளையாட்டு குறித்து பேசினர். இதேபோல, மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் மாணவ-மாணவிகளிடையே பேச்சு போட்டி நடந்தது.
Related Tags :
Next Story






