கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி


கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி
x

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் மாணவிகள் அனு, சண்முகப்பிரியா ஆயிஷா அஜிபா ஆகியோர் முறையே முதல் 3 பரிசுகளை பெற்றனர். போட்டி நடுவர்களாக கல்லூரி கல்வி இணை இயக்குனரால் தேர்வுசெய்யப்பட்ட தமிழ்த்துறை இணை பேராசிரியர்கள் பணிபுரிந்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது என தமிழ் வளர்ச்சி துறை, உதவி இயக்குனர் ஜோதி தெரிவித்தார்.

1 More update

Next Story