கல்லூரி மாணவர்களுக்கு 3-ந்தேதி பேச்சு போட்டி


கல்லூரி மாணவர்களுக்கு 3-ந்தேதி பேச்சு போட்டி
x

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி அரியலூரில் கல்லூரி மாணவர்களுக்கு வருகிற 3-ந்தேதி பேச்சு போட்டி நடக்கிறது.

அரியலூர்

தமிழக அரசின் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி வருகிற 3-ந்தேதி காலை 10 மணிக்கு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.


Next Story