விக்கிரவாண்டியில்கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிதொடக்கவிழாவில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் பங்கேற்பு


விக்கிரவாண்டியில்கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிதொடக்கவிழாவில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் பங்கேற்பு
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டியில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.

விழுப்புரம்


விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் விக்கிரவாண்டி சூர்யா கல்வி குழுமத்தில் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவுக்கு எம்.எல்.ஏ. புகழேந்தி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி வரவேற்றார்.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலெக்டர் பழனி, மாநில ஒருங்கிணைப்பாளர் கான்ஸ்டன்ட் டைன் ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். அமைச்சர் பொன்முடி போட்டியை தொடங்கி வைத்தார். இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 70 கல்லூரிகளிலிருந்து 270 மாண,வ மாணகிள் பங்கேற்றனர். 2 நாட்கள் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.விழாவில், தாசில்தார் ஆதிசக்தி சிவகுமரி மன்னன், முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ், ஒன்றியக்குழு தலைவர் சங்கீத அரசி ரவிதுரை, துணை தலைவர்ஜீவிதா ரவி,பேரூராட்சி தலைவாஅப்துல் சலாம், துணை தலைவா் பாலாஜி, நியமனக்குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, கல்லூரி முதல்வர்கள் அன்பழகன், வெங்கடேஷ், ஜெகன், பாலாஜி, மதன் கண்ணன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் இளந்திரையன், ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி ரவிதுரை, ஜெயபால், நகர செயலாளர் நைனா முகமது, மாவட்ட கவுன்சிலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.


Next Story