சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி


சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
x

தி.மு.க. சட்டத்துறை சார்பில் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்தப்பட்டது.

திருநெல்வேலி

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. சட்டத்துறை சார்பில் நெல்லை மண்டல அளவிலான சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி பாளையங்கோட்டை சட்டக்கல்லூரி வளாகத்தில் நடந்தது. மாநில சட்டத்துறை செயலாளரும். மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டியில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் சட்டக்கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.25 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் காமினி தேவன், மாவட்ட வழக்கறிஞரணி தலைவர் ராஜா முகமது, வக்கீல் கந்தசுவாமி, சட்டத்துறை இணை செயலாளர்கள் ரவிசந்திரன், பச்சையப்பன், சந்துரு, மாநகர செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story