பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி


பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி
x
தினத்தந்தி 6 Nov 2022 6:45 PM GMT (Updated: 6 Nov 2022 6:46 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டி வருகிற 14-ந் தேதி நடக்கிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டி வருகிற 14-ந் தேதி நடக்கிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பேச்சுப் போட்டி

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்தநாளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகளை நடத்த அரசு அறிவறுத்தி உள்ளது. அதன்படி வருகிற 14-ந் தேதி முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினவிழா, ரோசாவின் ராசா, ஜவகர்லால் நேருவின் தியாகங்கள், நூல்களைப் போற்றியநேரு, அண்ணல் காந்தியின் வழியில் நேரு, இளைஞரின் வழிகாட்டி நேரு ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு இந்தியவிடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு, நேருகட்டமைத்த இந்தியா, காந்தியும் நேருவும், நேருவின் பஞ்சசீலக் கொள்கை, உலகஅமைதிக்குநேருவின் தொண்டு, அமைதிப்புறா - நேரு ஆகிய தலைப்புகளிலும் போட்டிகள் நடக்கிறது.

பரிசு

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் பள்ளிமாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளிமாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story