பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
x

கரூர் மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள் வருகிற 17-ந் தேதி நடக்கிறது.

கரூர்

பேச்சுப்போட்டிகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மாவட்ட, மாநில அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 2022-2023-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 17-ந் தேதி காலை 9 மணிக்கு தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

முதல் பரிசு ரூ.10 ஆயிரம்

ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் போட்டிக்கு ஒருவர் வீதம் மூன்று மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை அந்தந்த கல்லூரி முதல்வரே தேர்வு செய்து அனுப்பவேண்டும். இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் அந்தந்த கல்லூரி முதல்வரிடமிருந்து உரிய படிவத்தை பெற்று பூர்த்தி செய்து போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டிடத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளர்.


Next Story