பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி
கரூரில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டி நடந்தது.
கரூர்
ஜூலை 18-ந்தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி கரூர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் முதன்மைக் கல்வி அலுவலரால் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும். இதில் தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஜோதி, நடுவர்களாக முதுகலை தமிழாசிரியர்கள் சசிகலா, தேவி, தேன்மொழி மற்றும் தமிழாசிரியர்கள் விஜயராணி, சரவணக்குமார், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story