கருணாநிதி பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி
கருணாநிதி பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு 28-ந்தேதி பேச்சு போட்டி நடக்கிறது.
அரியலூர்
மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி வருகிற 28-ந்தேதி காலை 9.30 மணியளவில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மட்டுமின்றி மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், இவை அல்லாமல் அரசு பள்ளி மாணவ-மாணவிகளில் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் ரூ.2 ஆயிரம் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது. எனவே இந்த போட்டியில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகள் பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story