11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சு போட்டி-கலெக்டர் தகவல்


11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சு போட்டி-கலெக்டர் தகவல்
x

பாளையங்கோட்டையில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடக்கிறது என்று கலெக்டர் தெரிவித்தார்.

திருநெல்வேலி

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நெல்லை மாவட்டத்தில் 11-ம் வகுப்பு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அதன்படி 6-ந் தேதி (வியாழக்கிழமை) பாளையங்கோட்டை கதீட்ரல் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டி நடக்கும் முன்பு அதற்கான தலைப்பு வழங்கப்படும். இந்த போட்டியில் ஒரு பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். அந்த மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பரிந்துரையுடன் உரிய படிவத்தினை நிறைவு செய்து கொடுக்க வேண்டும்.

போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல்பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. முதல்இடம் பிடிக்கும் மாணவர்கள் சென்னையில் நடக்கும் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்படுவார்கள். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி துணை இயக்குனரை நேரிலோ அல்லது 0462- 2502521 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


Next Story