அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவையொட்டி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவையொட்டி நூலகத்தில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடந்தது.
வந்தவாசி
அப்துல் கலாம் பிறந்த நாள் விழாவையொட்டி நூலகத்தில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடந்தது.
வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள கிளை நூலகத்தில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவையொட்டி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி வெங்கடேசன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற உறுப்பினர் எஸ்.ரமேஷ், டாக்டர் ச.காளிச் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் ஜா.தமீம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தென்னாங்கூர் அரசு கலைக்கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் ஆ.மாணிக்கவேலு பங்கேற்று சிறப்புரையாற்றினார். பேச்சுப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. வந்தவாசி எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பூங்குயில் சிவக்குமார், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கதிரொளி, கல்வியாளர் முதல்வர் சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர்.. நிகழ்ச்சியின் இறுதியாக மருதாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை க.அன்பு நன்றி கூறினார்.