காந்தி பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 12-ந் தேதி பேச்சு போட்டி
காந்தி பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 12-ந் தேதி பேச்சு போட்டி நடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி வருகிற 12-ந் தேதி புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு முடிய மற்றும் அனைத்து கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ-மாணவிகளும் கலந்து கொள்ளலாம். இப்போட்டிகளில் பற்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.